துணிவு முதல் நாள் மொத்த வசூல்! உலகம் முழுக்க இத்தனை கோடிகளா
துணிவு
அஜித்தின் துணிவு படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் விஜய்யின் வாரிசை விட அதிகம் வசூலித்து இருப்பதாக முன்பே கூறப்பட்டது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவிலும் பிரமாண்ட வசூலை துணிவு குவித்து இருக்கிறது.
இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் துணிவு முதல் நாளில் எவ்வளவு வசூலித்து இருக்கிறது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரம்மாண்ட வசூல்
முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 25 கோடி வசூலித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் வந்த மொத்த வசூல் 50 கோடிக்கும் அதிகம் என தகவல் வந்திருக்கிறது.
முதல் நாளிலேயே துணிவு பிரம்மாண்ட வசூல் மைல்கல்லை கடந்து இருப்பதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தை பிடித்த துணிவு மற்றும் வாரிசு- தரமான சம்பவம்