வாரிசு வாழ்நாள் சாதனையை சில மணி நேரங்களில் அடித்து நொறுக்கிய அஜித்.. மாஸ் காட்டும் ரசிகர்கள்
அஜித்தின் துணிவு
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் துணிவு. இப்படத்தின் First லுக் நேற்று மாலை வெளிவந்தது.
தயாரிப்பாளர் போனி கபூர் இந்த First லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
பல மாதங்களாக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது மாபெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
அடித்து நொறுக்கிய அஜித்
இதே போல் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படத்தின் First லுக் வெளிவந்திருந்தது. இந்த First லுக் போஸ்டர், இதுவரை 23.5K ரீ ட்விட்ஸ் மற்றும் 72K Hearts வாங்கியுள்ளது.
ஆனால், நேற்று மாலை வெளிவந்த அஜித்தின் துணிவு படத்தின் First லுக் 27K ரீ ட்விட்ஸ் மற்றும் 79.4K Hearts வாங்கி வாரிசு படத்தின் வாழ்நாள் First லுக் போஸ்டர் சாதனையை முறியடித்துள்ளது.
ஆனால், விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாரிசு படத்தின் First லுக் போஸ்டரின் சாதனையை துணிவு படத்தின் First லுக் முறியடிக்கவில்லை. இது தயாரிப்பாளர்களின் பதிவுகளை மட்டுமே வைத்து ஒப்பிடபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.