துணிவு பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரில் இதை எல்லாம் கவனித்தீர்களா?
துணிவு பர்ஸ்ட் லுக்
துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ஹெச். வினோத் மற்றும் அஜித் கூட்டணி சேரும் மூன்றாவது படம் இது.
ஏகே61 என இதுவரை அழைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு சரியாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. துணிவு என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டதும் அது தான் தற்போது இணையத்தில் பெரிய ட்ரெண்ட்.
போஸ்டரில் என்ன இருக்கு
துணிவு பர்ஸ்ட் லுக் போஸ்டரின் டிசைன் இந்திய ரூபாய் நோட்டில் இருக்கும் டிசைன் தான். போஸ்டரின் டாப்பில் 2000 ருபாய் நோட்டின் பிங்க் நிறம் சற்று இருக்கிறது. அதனால் மொத்த கதையும் ஒரு மிகப்பெரிய தொகை பணத்தை கொள்ளையடிப்பது பற்றியதாக இருக்கலாம். No guts No Glory என டேக் லைன் அதை கிட்டத்தட்ட உறுதி செய்கிறது.
பொறுத்திருந்து பார்க்கலாம் துணிவு கதை என்னவாக இருக்கும் என்று.