அஜித்தின் துணிவு படத்திற்கு Book My Showவில் செய்த சாதனை- இப்போதே ஆரம்பம்
அஜித்தின் துணிவு
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம் செம மாஸாக தயாராகி இருக்கிறது. படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி இப்போது வரை வந்த படத்தின் தகவல்களையே ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.
அண்மையில் தான் அஜித் துணிவு படத்திற்காக டப்பிங் வேலைகளை முடித்துள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகி இருந்தது.
சொல்லப்போனால் அஜித் டப்பிங் பேசும்போது வெளிவந்த முதல் திரைப்படம் இதுதான் என்றே கூறலாம்.
புக் மை ஷோ
படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது, தமிழகத்தில் மட்டுமே 800 திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கண்டிப்பாக படத்தின் வசூல் வேறலெவலில் இருக்கும் என ரசிகர்கள் இப்போதே கணக்கிட ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்போது என்ன விஷயம் என்றால் புக் மை ஷோவில் 300k Interest வந்துள்ளதாக கூறப்படுகிறது.