No.1,2,3 என முதல் மூன்று இடத்தையும் கைப்பற்றிய அஜித்.. வேறு யாராலும் செய்யமுடியாத சாதனை
துணிவு
அஜித் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் துணிவு. அ. வினோத் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மாபெரும் வெற்றியை பெற்ற தந்த இப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த படமும் செய்யமுடியாத வசூல் சாதனையை செய்துள்ளது. ஆம், இதுவரை ரூ. 260 கோடிக்கும் மேல் வசூல் செய்து வரும் துணிவு திரைப்படத்தின் மூலம் ரூ. 110 கோடிக்கும் மேல் ஷேர் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று இடத்தையும் கைப்பற்றிய அஜித்
சமீபத்தில் துணிவு திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்தது. இந்நிலையில், வெளிவந்த சில நாட்களே ஆகும் நிலையில் இந்தியளவில் முதல் மூன்று இடத்தையும் துணிவு படமே பிடித்துள்ளது.

ஆம், No. 1 - துணிவு படத்தின் ஹிந்தி வெர்ஷன், No.2 - துணிவு தமிழ், No. 3 - துணிவு தெலுங்கு என நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளது.
கோடி ரூபாய் கொடுத்தாலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன்.. 38 வயது நடிகையின் அதிரடி முடிவு