பூட்டை உடைத்து டிக்கெட்கள் திருட்டு..துணிவு படத்திற்கு வந்த புதிய சோதனை
அஜித் குமார்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வருகின்ற 11-ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் மஞ்சு வாரியார், முத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜி.எம் சுந்தர் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
துணிவு திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தான் விஜயின் வாரிசு திரைப்படமும் வெளியாகயுள்ளது. இதனால் முன்கூட்டிய ரசிகர்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

டிக்கெட்கள் திருட்டு
இந்நிலையில் வேலூர் மாவட்டம் அஜித் நற்பணி மன்றத்தில் வைத்திருந்த துணிவு படத்தின் டிக்கெட்களை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடியுள்ளனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வாரிசு படம் பார்த்து கண்ணீர் விட்டு அழுத பிரபலம்! எமோஷ்னல் காட்சிகள் பற்றி உருக்கம்