துணிவு இரண்டாம் சிங்கிள்.. ஜிப்ரான் கொடுத்த அப்டேட் வைரல்
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.
அஜித்தின் பல போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது. ஜிப்ரான் இசையமைப்பில் அனிருத் பாடி சமீபத்தில் வெளியான "சில்லா சில்லா" பாடல் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.
அஜித்தின் நடன அசைவுகள் சில காட்சிகளில் வருவது அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமைந்தது.

2ம் சிங்கிள்
துணிவு படத்தின் அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜிப்ரான் "காசேதான் கடவுளடா" என ட்வீட் செய்து அப்டேட் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் #காசேதான்-கடவுளடா என்ற ஹாஸ்டேக் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

தளபதி67 கேங்ஸ்டர் படம் தான்: மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்! - ப்ரெஸ் மீட் வீடியோ