அஜித் வலியை காட்டவே மாட்டார், ஷூட்டிங் முன்பு சொன்ன ஒரு வார்த்தை.. துணிவு ஸ்டண்ட் மாஸ்டர் பேட்டி
துணிவு
அஜித்தின் துணிவு படம் வங்கி கொள்ளை மையப்படுத்திய கதை என்பதால் படத்தில் அதிக அளவில் மாஸ் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் துணிவுக்கு ஸ்டாண்ட் மாஸ்டராக பணியாற்றிய சுப்ரீம் சுந்தர் அளித்திருக்கும் பேட்டியில் படத்தில் 90% நிஜ காட்சிகள் தான் இருக்கும், 10 சதவீதம் மட்டுமே தேவையான இடங்களில் VFX பயன்படுத்தினோம் என கூறி இருக்கிறார்.

அஜித் சொன்ன வார்த்தை
"அஜித் உடலில் பல இடங்களில் சர்ஜரி செய்து இருந்தாலும் அவர் ஷூட்டிங் நேரத்தில் தனது வலியை வெளியில் சொல்லவே மாட்டார்."
"என்னை புதுமுக நடிகர் என நினைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே ஓகே சொல்லுங்க என ஷூட்டிங் தொடங்கும் முன்பே அஜித் கூறினார்" என சுப்ரீம் சுந்தர் கூறி இருக்கிறார்.
அவரது முழு பேட்டி இதோ
நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்! அவரா இப்படி? படுவைரலாகும் போட்டோ