இது தான் உண்மையான வெற்றி.. இயக்குனர் எச். வினோத் அப்பாவிற்கு கிடைத்த மரியாதை
துணிவு
கடந்த இரு வாரங்களாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் துணிவு. அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை தமிழகத்தில் ரூ. 112 கோடி வரை வசூல் செய்துள்ள இப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் இதுவரை கண்டிராத பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
உண்மையான வெற்றி
உலகளவில் ரூ. 200 கோடியை துணிவு படம் கடந்துவிட்டதாகவும் அண்மையில் தெரியவந்தது.
இந்நிலையில், துணிவு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் எச். வினோத்தின் அப்பாவை திரையரங்கிற்கு அழைத்து மரியாதை செய்துள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து, இது தான் உண்மையான வெற்றி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தோல்வியை நோக்கி செல்லும் வாரிசு.. விஜய்யின் படத்திற்கு இப்படியொரு நிலமையா

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri
