வாரிசு, துணிவு தமிழகத்தில் நடந்த ப்ரீ புக்கிங் விவரம்- அதிகம் வசூலித்தது இந்த படமா?
துணிவு-வாரிசு
அஜித்-விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்கள். இவர்களது படம் வெளிவந்தாலே அது ஹிட் லிஸ்ட் தான், நஷ்டம் என இல்லாமல் இவர்களின் படங்கள் இப்போதெல்லாம் ஓடுகின்றன.
அந்த வகையில் இப்போது பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜனவரி 11ம் தேதி அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.
துணிவு படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கும், விஜய்யின் வாரிசு அதிகாலை 4 மணிக்கும் ஒளிபரப்பாக இருக்கிறது.

ப்ரீ புக்கிங்
இந்த இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி நெருங்கி வருகிறது. ப்ரீ புக்கிங் வேகமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் இதுவரை நடந்த புக்கிங்கில் அஜித்தின் துணிவு ரூ. 7 கோடியும், விஜய்யின் வாரிசு ரூ. 6.9 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.