துப்பாக்கி படத்தின் இடைவேளை காட்சி இந்த படத்தின் காப்பியா!! சிக்கிய ஏ.ஆர். முருகதாஸ்
துப்பாக்கி
விஜய்யின் கெரியரில் மிகமுக்கியமான திரைப்படம் துப்பாக்கி. இன்று வரை விஜய்யின் டாப் 5 திரைப்படங்கள் என லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக துப்பாக்கி திரைப்படமும் இடம்பெறும்.
விஜய் நடித்த திரைப்படங்களிலேயே முதல் முறையாக ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படமும் இதுவே. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
துப்பாக்கி படத்தில் அதிகமாக கொண்டாடப்பட்ட காட்சி என்றால் அது இடைவேளை காட்சி தான். வில்லன் வித்யுத் ஜம்வால் பேசி முடித்தபின், ஹீரோ விஜய் I am waiting என கூறும்போது மொத்த திரையரங்கமும் ரசிகர்களின் ஆரவாரத்தில் வெடித்து சிதறியது.
இடைவேளை காட்சி காப்பியா
இந்த நிலையில், ஐகானிக் சீன் என துப்பாக்கி படத்தில் கூறப்படும் இடைவேளை காட்சி, பிரபல ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. 2008ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த 'Taken' திரைப்படத்தில் வரும் காட்சியை அப்படியே காப்பியடித்து துப்பாக்கி படத்தில் வைக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
Taken படத்தின் காட்சியையும், துப்பாக்கி படத்தின் இடைவேளை காட்சியை ஒன்று சேர்த்து வீடியோ ஒன்றை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Anna’s
— Matt.S (@mattskumar) March 10, 2024
Thuppaki interval scene was inspired from Taken ????♂️@ARMurugadoss ??#Vettaiyan pic.twitter.com/OlQh8ih6fx