வெளிவந்து 11 ஆண்டுகள் ஆகும் ப்ளாக் பஸ்டர் துப்பாக்கி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
துப்பாக்கி
ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணி என்றும் யாராலும் மறக்கமுடியாதா கூட்டணி ஆகும். விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய பத்ம என்றால் அது துப்பாக்கி தான்.

இன்று வரை விஜய்யின் மாஸ்டர் பீஸ் படம் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி வெளிவந்த இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால் வித்யுத் ஜாம்வால், சத்யன், ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் இன்றுடன் வெளிவந்து 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #11YearsOfThuppakki என குறிப்பிட்டு கொண்டாடி வருகிறார்கள்.
11YearsOfThuppakki வசூல்
இந்நிலையில், விஜய்யின் கெரியர் பெஸ்ட் திரைப்படங்களில் ஒன்றான துப்பாக்கி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, துப்பாக்கி திரைப்படம் உலகளவில் ரூ. 129 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவே விஜய்க்கு முதல் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan