துப்பறிவாளன் 2 என்னாவது - தற்போதைய நிலை இதுதானா
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்ற படம் துப்பறிவாளன்.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்தது. இதனிடையே விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இயக்குனர் மிஷ்கின் இப்படத்தில் இருந்து விலகினார்.
இதனால் மீதிப் படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் கடந்தாண்டு அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து இப்படம் குறித்து எந்த வித அப்டேட்டும் வெளியாகவில்லை. நடிகர் விஷாலோ, அடுத்தடுத்து மற்ற படங்களில் பிசியாகி நடித்து வருகிறார்.
தற்போது எனிமி படத்தில் நடித்து வரும் விஷால், அடுத்ததாக து.ப.சரவணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர அடங்கமறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விஷால், துப்பறிவாளன் 2 படத்தை கிடப்பில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.