மீண்டும் துவங்குமா துப்பறிவாளன் 2.. கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஷால்
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த படம் துப்பறிவாளன்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக துவங்கியது.
இதன் இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமியும் நடித்துள்ளனர்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்தது. இதையடுத்து விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார்.
இதனால் மீதி படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் கடந்தாண்டு அறிவித்தார். இதையடுத்து, இப்படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், துப்பறிவாளன் 2 படம் குறித்து அப்டேட்டை வெளியிட்டு உள்ளார் நடிகர் விஷால்.
அதன்படி துப்பறிவாளன் 2 படத்தை ஜனவரியில் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும், ஏப்ரலில் படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.