தீபாவளி விருந்தாக இன்று வெளிவந்த டைகர் 3 படம் எப்படி இருக்கு.. விமர்சனம் இதோ
டைகர் 3
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சல்மான் கான், கத்ரினா கைப் மற்றும் இம்ரான் ஹாஷ்மி இணைந்து நடித்து இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் டைகர் 3.
இப்படத்தை மனீஷ் ஷர்மா என்பவர் இயக்கியுள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
படம் எப்படி இருக்கு என்பதை அவர்களுடைய விமர்சனங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
ரசிகர்களின் விமர்சனம்
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் ஒரு அட்டகாசமான ஸ்பை திரில்லர் படம் என்றும் சல்மான் கான் நடிப்பு முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் நன்றாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
கத்ரினா கைப் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டுகிறது. வில்லனாக வரும் இம்ரான் ஹாஷ்மி நடிப்பு ஓகே. ஷாருக்கான் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் கேமியோ கைதட்டல்களை அள்ளிவிட்டதாம்.
ஆனால், VFX இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம் என கூறுகின்றனர். முதல் பாதி திரைக்கதை மிகவும் தொய்வு என்றும் இரண்டாம் பாதி திரைக்கதையை ஓரளவு நன்றாக கையாண்டுள்ளார் இயக்குனர் மணீஷ் ஷர்மா என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
#Tiger3 - Decent film - ⭐️⭐️⭐️
— Joginder Tuteja (@Tutejajoginder) November 12, 2023
Second half is what makes this one a better affair. Also it’s fast paced so that’s a plus. Action too is non-stop. However the screenplay is of convenience and twists-n-turns predictable. In fact 1st half has a lot happening but kind of incoherent.… pic.twitter.com/E6UmvyjE1V