முதல் நாள் சல்மான் கானின் டைகர் 3 செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் வேட்டை
டைகர் 3
சல்மான் கானின் வெற்றி திரைப்படங்களில் ஒன்று டைகர். முதல் பாகத்தை தொடர்ந்து வெளிவந்த இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் தற்போது மூன்றாம் பாகமும் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மணீஷ் ஷர்மா இயக்கிய இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் சல்மான் கானுடன் இணைந்து கத்ரினா கைப் மற்றும் இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நேற்று தீபாவளி விருந்தாக வெளிவந்து இப்படத்திற்கு மக்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.
வசூல் விவரம்
விமர்சனங்கள் படம் குறித்து கலவையான முறையில் இருந்தாலும் கூட படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில், முதல் நாள் டைகர் 3 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, டைகர் 3 திரைப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 95 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்பின் வரும் நாட்களில் டைகர் 3 படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan