5 நாட்களில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா டைகர் திரைப்படம்!! இதோ வசூல் விவரம்
டைகர் 3
ஸ்பை த்ரில்லர் யூனிவர்ஸில் படங்களை தயாரித்து வருகிறது யாஷ் ராஜ் பிலிம்ஸ்.
கடந்த ஜனவரி மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை த்ரில்லர் சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் பிரமாண்டமாக உருவான டைகர் 3 திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளிவந்தது.
இப்படத்தையும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்து இருந்தது. இதில் ஹீரோயினாக நடிகை கத்ரீனா கைப் நடித்து இருந்தார்.

வசூல் விவரம்
இந்நிலையில் டைகர் 3 விவரம் குறித்து தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதில் முதல் நாளில் மட்டும் ரூபாய் 95 கோடி வசூல் செய்திருந்த நிலையில் ஐந்து நாட்களில் 312 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
