டைகர் 3 படத்திற்கு மாபெரும் வரவேற்பு.. இரண்டு நாட்களில் சல்மான் கான் செய்த வசூல் சாதனை
டைகர் 3
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் டைகர் 3. ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் மீண்டும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தில் இருந்து டைகர் 3 படத்தை வெளியிட்டுள்ளனர்.
இப்படத்துடன் ஏற்கனவே இதே தயாரிப்பு நிறுவனம் வெளிவந்த ஹ்ரித்திக் ரோஷனின் வார் படத்தையும், ஷாருக்கானின் பதான் திரைப்படத்தையும் இணைந்து புதிய யூனிவெர்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
ஏற்கனவே ஷாருக்கான் நடித்த பதான் படத்தில் சல்மான் கான் டைகர் கதாபாத்திரத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அப்போதே தெரிந்துவிட்டது யாஷ் ராஜ் பிலிம்ஸ் புதிதாக யூனிவெர்ஸ் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள் என்று. அதை டைகர் 3 படத்தின் மூலம் இன்னும் வலுப்படுத்தியுள்ளனர்.
வசூல் விவரம்
படத்தின் மீது சற்று கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட வசூல் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. இந்நிலையில், டைகர் 2 திரைப்படம் உலகளவில் ரூ. 185 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
இரண்டே நாட்களில் ரூ. 185 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள டைகர் 3, கண்டிப்பாக வரும் நாட்களில் பல வசூல் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது.. உதயநிதி காய்ச்சலே வந்து படுத்துக்கொண்டார் - இபிஎஸ் IBC Tamilnadu
