புதியதாக துவங்கப்பட்ட காதல் காதல் காதல் சீரியலின் நேரம் மாற்றம்...
காதல் காதல் காதல்
மிர்ச்சி செந்தில் ஒரு கதை கூற அதை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கேட்பது போன்ற ஒரு புரொமோ வந்தது.
அதாவது காதல் காதல் காதல் என்ற புதிய சீரியலுக்கான புரொமோ தான் அது. ஒரே தொடரில் 3 காதல் கதைகளை மையப்படுத்தி, வித்தியாசமான பாணியில் புதிய தொடராக எடுக்கப்பட்டுள்ளது.
எந்த சீரியல் எடுத்தாலும் ஒரேஒரு காதல் கதையை மையப்படுத்தியதாக இருக்கும், ஆனால் இந்த தொடர் ஒன்று இல்லை, இரண்டு இல்லை 3 காதல் கதைகளை மையப்படுத்தியதாக உள்ளது.
பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் நடிக்க அருண் பிரசாத், மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, மலையாள சின்னத்திரை நடிகர் நலீஃப் கியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

மாற்றம்
கடந்த ஜுலை 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த சீரியல் இப்போது மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரின் நேரம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் சரியான நேரம் பற்றிய விவரம் வெளியாகவில்லை.
