விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியலின் நேரம் மாற்றம்... எந்த தொடர் தெரியுமா?
விஜய் டிவி
தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ். இதில் டாப்பில் இருப்பது சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகள் தான்.
சீரியலா, ரியாலிட்டி ஷோ வா இந்த இரண்டிலுமே விஜய் டிவி கெத்து காட்டி வருகிறார்கள்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடரின் நேரம் மாற்றம் குறித்த தகவல் தான் வந்துள்ளது. அண்மையில் மகளே என் மருமகளே மற்றும் பூங்காந்து திரும்புமா சீரியல்களின் நேர மாற்ற தகவல் வந்தது.

பூங்காற்று திரும்புமா மதியம் 3 மணிக்கும், மகளே என் மருமகளே சீரியல் மாலை 6 மணிக்கும் நேரம் மாற்றம் நடந்தது.
வேறு தொடர்
இந்த இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றத்தை தொடர்ந்து தற்போது வேறொரு சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ள தகவல் வந்துள்ளது.
விஜய்யில் ஒளிபரப்பாகி வரும் அதே கண்கள் சீரியல் இனி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணிக்கு தொடங்கி 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம்.