நவம்பர் 3 முதல் ஜீ தமிழ் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்... வெளிவந்த விவரம்
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரைவில் சன் மற்றும் விஜய் டிவியை தொடர்ந்து 3வது வெற்றிகரமான தொலைக்காட்சியாக உள்ளது ஜீ தமிழ்.
இந்த தொலைக்காட்சி மக்களிடம் அதிகம் சேர காரணமாக இருந்தது முதலில் சீரியல்கள் தான், செம்பருத்தி என்ற சீரியலால் தான் அந்த தொலைக்காட்சிக்கு பெரிய ரீச் கிடைத்தது என்றே கூறலாம். டிஆர்பியில் நம்பர் 1 இடம் பிடித்த ஒரே ஒரு ஜீ தமிழ் சீரியலும் அதுதான்.
இப்போது கார்த்திகை தீபம், வீரா, சந்தியா ராகம், அண்ணா, அயலி, கெட்டி மேளம் போன்ற சீரியல்கள் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது.

மாற்றம்
கடந்த சில வாரங்களாக ஜீ தமிழில் டிஆர்பியில் குறைந்து வரும் தொடர்களை முடித்து வருகிறார்கள். நினைத்தாலே இனிக்கும் தொடர் முடிவுக்கு வந்ததையடுத்து மாரி சீரியல் விரைவில் முடிய இருக்கிறது.

எனவே புதிய சீரியல்களை ஜீ தமிழ் களமிறக்க உள்ள நிலையில் பழைய சீரியல்களின் நேரம் மாறியுள்ளது.
வரும் நவம்பர் 3 முதல் சலங்கை ஒலி 3 முதல் 4.30 மணிக்கும், கெட்டி மேளம் 6 மணிக்கும், வீரா 6.30 மணிக்கும், திருமாங்கல்யம் 7.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    