சன் டிவியின் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்- ரசிகர்களே கவனித்தீர்களா, எந்த தொடர் தெரியுமா?
சன் டிவி
சன் தொலைக்காட்சியின் சீரியல்கள் தான் டிஆர்பியின் உச்சத்தில் உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கயல் தொடர் தான் டாப்பில் இருந்தது, ஆனால் இப்போதெல்லாம் புதியதாக புதுமுக நடிகர்களை வைத்து எடுக்கப்படும் சிங்கப்பெண்ணே தொடர் தான் முதல் இடத்தை பிடித்து வருகிறது.
விபத்திற்கு பிறகு எதிர்நீச்சல் சீரியல் புகழ் மதுமிதா போட்ட பதிவு- தற்போது அவரது நிலை, புகைப்படத்துடன் இதோ
சிங்கப்பெண்ணே கிராமத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் வீட்டில் பண நெருக்கடி இருப்பதால் சென்னைக்கு வேலை செய்ய வருகிறார், வந்த இடத்தில் நிறைய கஷ்டங்களையும் அனுபவிக்கிறார்.
இந்த தொடருக்கு தான் ரசிகர்கள் மத்தியில் இப்போது அதிக வரவேற்பு உள்ளது.
நேரம் மாற்றம்
இந்த தொடரை தாண்டி சன் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் எதிர்நீச்சல்.
குணசேகரன் வீட்டுப் பெண்கள் தங்களது சொந்த காலில் நிற்க போராட அதற்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
இப்போது குணசேகரன்-ஈஸ்வரி மகள் தர்ஷினியை யாரோ கடத்தி செல்ல அதை சுற்றியே கதை இப்போது நகர்கிறது. இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் நேரம் மாற்றப்பட இருப்பதாக சில தகவல்கள் வலம் வருகிறது.