திடீரென மாற்றப்பட்ட ஜீ தமிழ் சீரியல்களின் நேரம்...எந்தெந்த சீரியல்கள் நேரம் மாற்றம், முழு விவரம்
ஜீ தமிழ்
ஜீ தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது தொலைக்காட்சியின் டிஆர்பியை உயர்த்தி முன்னேறி வருகிறார்கள்.
அதற்காக மிகவும் விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட தொடர்கள், புத்தம்புது ரியாலிட்டி ஷோக்கள் என கொண்டு வருகிறார்கள்.
சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ், கார்த்திகை தீபம், அண்ணா போன்ற தொடர்கள் எல்லாம் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறுகின்றன.
ஒரு சீரியல் முடிவடைய உடனே புதிய தொடர்களை ஒளிபரப்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். விரைவில் ஜீ தமிழில் இந்திரா மற்றும் சண்டக்கோழி தொடர்கள் முடிவுக்கு வர இருக்கிறது.
நேரம் மாற்றம்
சில தொடர்கள் முடிவடைய புதிய தொடர்கள் ஒளிபரப்பாக இருப்பதால் மதிய நேர சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதயம் 1 முதல் 2 மணிக்கும், கனா 2 முதல் 2.30 மணிக்கும், நானே வருவேன் 2.30 முதல் 3.30 மணி வரைக்கும், நீ பாதி நான் பாதி 3.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.
இந்த நேர மாற்றம் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி முதல் மாற்றப்படுகிறதாம்.