அஜித் vs விஜய் சண்டையை கிளப்பும் தில் ராஜு.. பதிலடி கொடுத்த திருப்பூர் சுப்ரமணியன்
தில் ராஜு
வாரிசு படத்தை தயாரித்து இருக்கும் தில் ராஜு நேற்று அளித்த பேட்டி தான் தற்போது தமிழ் சினிமாவில் சர்ச்சையாக மாறி இருக்கிறது. தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 ஹீரோ, அதனால் வாரிசு படத்திற்கு அதிகம் தியேட்டர் கொடுக்க வேண்டும் என உதயநிதியை சந்தித்து பேச போகிறேன் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
விஜய்க்கு கீழே தான் அஜித்தின் மார்க்கெட் value இருக்கிறது என தில் ராஜு கூறியதை வைத்து தற்போது சமூக வலைத்தளங்களில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

திருப்பூர் சுப்ரமணியன் பதிலடி
இந்நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் அளித்த பேட்டியில், "யார் நம்பர் 1 என எங்களுக்கு தெரியாதா. இங்கே கதை தான் ஸ்டார். எந்த படத்தின் கதை நன்றாக இருக்கிறதோ அது தான் ஓடும். வசூலை வைத்து ஸ்டார் என சொன்னால் தற்போது விக்ரம் வசூலில் சாதனை படைத்த கமல் தான் நம்பர் 1 ஸ்டார்."
"எல்லா நடிகர்களுக்கும் அந்தந்த காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க படங்கள் வரும். கதை நன்றாக இருந்தால் மட்டும் தான் அது நடக்கும்."
"இரண்டு படங்களுக்கு சம அளவில் தான் தியேட்டர்கள் கிடைக்கும். 4 நாள் முடிந்து அடுத்த திங்கட்கிழமை தான் தியேட்டர் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும்.
