பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரலாற்று சாதனை படைத்த அர்ச்சனா.. இதுவரை யாருக்கும் இப்படி நடந்தது இல்லை
பிக் பாஸ்
சின்னத்திரையில் பிரம்மாண்டமாக நடக்கும் நிக்ழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் 7வது சீசன் சமீபத்தில் தான் தமிழில் நடந்து முடிந்தது. இந்த சீசனில் 23 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில் டாப் 5ல் மாயா, விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் இடம்பெற்றனர். இந்த ஐவரில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் ஆனார் விஜே அர்ச்சனா.
கோப்பையை அர்ச்சனா தட்டி சென்றதன் மூலம் இவருக்கு ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் பிளாட் பரிசாக பெற்றார்.
சாதனை
இந்நிலையில் மக்களிடம் இருந்து அர்ச்சனா எவ்வளவு வாக்குகள் பெற்று பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆனார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவிற்க்கு 16 லட்சம் வாக்குகள் குவிந்துள்ளது என தெரியவந்துள்ளது.
இதுவரை எந்த ஒரு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும், எந்த ஒரு போட்டியாளருக்கும் இவ்வளவு அதிகமான வாக்குகள் குவியவில்லை என தகவல் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் பிக் பாஸ் வறலாற்றில் மாபெரும் சாதனை படைத்த போட்டியாளராக மாறியுள்ளாரம் அர்ச்சனா. இதனை அர்ச்சனாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
