தமிழக அரசின் 2021, 2022, 2023ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு...
கலைமாமணி விருது
ஒரு கலைஞனுக்கு விருது என்பது பெரிய விஷயம். சினிமாவில் திறம்பட கலக்கும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நிறைய விருது விழாக்கள் நடக்கின்றன.
இந்தியாவில் உயரிய விருதாக பார்க்கப்படும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட சமீபத்தில் தான் விருதுகளும் கொடுக்கப்பட்டது.
தற்போது தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 முதல் 2023ம் ஆண்டிக்கான விருது அறிவிப்புகள் தான் வந்துள்ளது. அதில் விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட உள்ளது.
இதோ லிஸ்ட்
2021 - திரைப்பட இயக்குநருக்கான விருது லிங்குசாமிக்கு வழங்கப்படுகிறது.
2021 - திரைப்பட நடிகருக்கான விருது நடிகர் மணிகண்டனுக்கு வழங்கப்படுகிறது.
2021 - திரைப்பட நடிகைக்கான விருது சாய்பல்லவிக்கு வழங்கப்படுகிறது.
2021- நாடக நடிகருக்கான விருது பூச்சி முருகனுக்கு வழங்கப்படுகிறது.
2022 - நடிகைக்கான கலைமாமணி விருது நடிகை ஜெயாவிற்கு வழங்கப்படுகிறது.
2022ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது விக்ரம் பிரபுவிற்கு வழங்கப்படுகிறது.
2022 - கலைமாமணி விருதை பாடலாசிரியர் விவேகா பெறுகிறார்.
2023 - திரைப்பட நடிகருக்கான விருது நடிகர் மணிகண்டனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 - குணசித்திர நடிகருக்கான கலைமாமணி விருது ஜார்ஜ் மரியானுக்கு வழங்கப்படுகிறது.
2023- இசையமைப்பாளருக்கான கலைமாமணி விருதை பெறுகிறார் அனிருத்
2023 - நடன இயக்குநர் சாண்டிக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
பின்னணி பாடகிக்கான கலைமாமணி விருதை ஸ்வேதா மோகன் பெறுகிறார்.