மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித்தின் தற்போதைய நிலை என்ன?- வீடு திரும்பினாரா?
நடிகர் அஜித்
பிரபலங்களுக்கு ஏதாவது ஒரு சோகமான விஷயமோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ அது ரசிகர்களிடம் மிகவும் பரபரப்பாக பேசப்படும்.
அப்படி அண்மையில் நடிகர் அஜித்துக்கு காதுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பில் வீக்கம் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
அவர் மருத்துவமனை சென்றதும் ரசிகர்கள் அஜித்திற்கு என்ன ஆனது என சமூக வலைதளங்களில் சுற்றிய பல செய்திகளை கேட்டு அதிர்ச்சி ஆனார்கள்.
பின் அவரது பிஆர்ஓ தரப்பில் இருந்து சரியான தகவல் வர ரசிகர்கள் அமைதியானார்கள்.

தற்போதைய நிலை
நடிகர் அஜித் சிகிச்சைக்காக தனது மனைவி ஷாலினியுடன் மருத்துவமனை வந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து இன்று காலை வீடு திரும்பிவிட்டாராம்.
விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பிலும் கலந்துகொள்வார் என தகவல் வந்துள்ளது.