தர்ஷினியை குணசேகரன் கடத்தி வைத்திருப்பது இதற்காக தானா, இப்படி ஒரு அப்பாவா?- எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல்
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். குணசேகரன் என்ற ஒரு நபரின் சுற்றியே மிகவும் பரபரப்பாக நடக்கும் ஒரு கதை.
4 பெண்கள், ஒரே ஆள் எல்லோரையும் சுற்றி வளைத்து கொடுமைப்படுத்தி வருகிறார்.
தற்போது கதையில் தர்ஷினியை யாரோ கடத்தி வைக்க பழியை ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தம் மீது போடுகிறார் குணசேகரன். பின் கதை செல்ல தனது மகளை அவரே தான் கடத்தி வைத்துள்ளார் என்பது தெரிய வருகிறது.
ஜீவானந்தம் வேறு ஜெயிலில் இருந்து தப்பித்துவிட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் பண கஷ்டம், தாராவை பள்ளியில் பணம் கட்டாததால் நிறுத்தியுள்ளனர்.
பரபரப்பு புரொமோ
இன்று வந்துள்ள புரொமோவில் குணசேகரன் தான் தர்ஷினியை கடத்தி வைத்து போதை ஊசி போட்டு கொடுமைப்படுத்தி வருவது தெரிய வருகிறது. அதோடு கரிகாலன் மற்றும் ஜான்சிக்கு கண்டிப்பாக ஏதோ நடக்கும் என வாக்கு கொடுக்கிறார்.
இன்னும் யாரும் தர்ஷினியை கண்டுபிடிக்கவில்லை, எனவே அவருக்கும் கரிகாலனுக்கும் குணசேகரன் சொன்னபடி திருமணம் செய்து வைத்துவிடுவாரா என தெரியவில்லை. இதோ இன்றைய புரொமோ,