37 வயது நடிகையை திருமணம் செய்யப்போகும் நடிகர் டாம் க்ரூஸ்.. விண்வெளியில் கல்யாணம்
உலகளவில் புகழ்பெற்ற நடிகர் டாம் க்ரூஸ். இவர் நடிப்பில் கடைசியாக Mission: Impossible The Final Reckoning திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
திருமண வாழ்க்கை
நடிகர் டாம் க்ரூஸ் கடந்த 1987ஆம் ஆண்டு Mimi Rogers என்பவரை திருமணம் செய்துகொண்டார். மூன்று ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வந்த இவர்கள் 1990ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பின் பிரபல நடிகை Nicole Kidman என்பவர் 1990ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் 2001ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் 2006ஆம் ஆண்டு டாம் க்ரூஸை Katie Holmes என்பவர் மணந்தார். பின் இருவரும் 2012ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.
இதுவரை மூன்று முறை திருமணம் செய்துகொண்டுள்ள நடிகர் டாம் க்ரூஸ், தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
அனா டி அர்மாஸ்
டாம் க்ரூஸ் ஹாலிவுட் நடிகை அனா டி அர்மாஸ் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஒன்றாக சுற்றி திரியும் புகைப்படங்கள் வைரலானது.
இந்த நிலையில், தங்களது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த இந்த ஜோடி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களின் திருமணத்தை நடத்த விண்வெளியை தேர்வு செய்துள்ளார்களாம். இதன்மூலம், விண்வெளியில் திருமணம் செய்துகொள்ளும் முதல் ஜோடி என்கிற பெருமையை பெற டாம் க்ரூஸ் ஆர்வமாக இருக்கிறாராம்.

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan
