உலகப்புகழ் பெற்ற நடிகர் டாம் க்ரூஸின் BMW கார் திருட்டு..! மீண்டும் கிடைத்தும் அதிர்ச்சியடைந்த பிரபலம்

car theft viral news tom curise
By Kathick Aug 28, 2021 02:50 PM GMT
Report

மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்களில் நடித்து உலக புகழ்பெற்ற ஆக்ஷன் ஹீரோவாக இருப்பவர் டாம் க்ரூஸ்.

சமீபத்தில் இவர் தற்போது நடித்து வரும் படப்பிடிப்பிற்கு தன்னுடைய சொகுசு காரில் வந்துள்ளார். அப்போது தீடீரென டாம் க்ரூஸின் விலை உயர்ந்த BMW X7 கார் திருடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காரில் பொருத்தப்பட்டிருந்த மின்னணு கருவி மூலம், திருடப்பட்ட காரை மீட்டு நடிகர் டாம் க்ரூசிடம் ஒப்படைத்தனர்.

அதே நேரத்தில், கார் கிடைத்தாலும் காரில் இருந்த அவரது உடமைகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு மட்டும் சுமார் ரூ. 1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

டாம் க்ரூஸின் கார் திருடப்பட்டு பின்னர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US