Spiderman brand new day படத்திற்காக டாம் ஹாலண்ட் வாங்கிய சம்பளம், ரசிகர்கள் பிரமிப்பு
Spiderman brand new day
டாம் ஹாலண்ட் இந்த பெயர் உலகம் முழுவதுமே மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றது தான். இதற்கு முக்கிய காரணம் இவர் நடித்த ஸ்பைடர் மேன் சீரிஸ் படங்கள் தான்.
இந்த படங்கள் மூலம் இவருக்கு என கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. இந்நிலையில் டாம் ஹாலண்ட் நடிப்பில் சமீபத்தில் ஸ்பீடர் மேன் ப்ராண்ட் நியூ டே படம் திரைக்கு வந்து 20,000 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.

அதிலும் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 500 கோடி வசூலை தாண்டி, ஹாலிவுட் சினிமாவிலேயே, இந்தியாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
இந்த படத்திற்காக இவருக்கு தற்போது கிடைத்த சம்பளம் 100 மில்லியன் டாலர் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இதை வைத்து பார்க்கையில் இளம் வயதில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமையை டாம் ஹாலண்ட் பெற்றுள்ளார்.