மகாராஜா படம் பார்த்த ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ்.. சாச்சாவின் நடிப்பை புகழ்ந்து பேச்சு
Tom Hanks praised Sachana Namidass in maharaja: மகாராஜா திரைப்படத்தை பார்த்துவிட்டு, அப்படத்தில் நடித்த நடிகை சாச்சனாவின் நடிப்பை புகழ்ந்து பேசியுள்ளார் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ். அவர் என்ன கூறினார் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
மகாராஜா
2024-ஆம் ஆண்டு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் மகாராஜா. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் மற்றும் சாச்சனா நடிப்பில் உருவாகி வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்காக இயக்குநர் நித்திலன் மற்றும் நடிகை சாச்சனாவிற்கு தேசிய விருது கிடைத்தது.

ஹாலிவுட் ரீமேக்
மகாராஜா திரைப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்போவதாக தகவல் உலா வந்தது. பின் அதனை விஜய் சேதுபதி உறுதி செய்தார். இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் Matthew McConaughey கதாநாயகனாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இவர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் இன்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

மகாராஜா படத்தை பார்த்து பாராட்டிய டாம்
ஹாலிவுட் திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் டாம் ஹாங்க்ஸ். இவர் நடிப்பில் வெளியான Cast Away, Forrest Gump, The Green Mile போன்ற திரைப்படங்கள் இன்றும் எவர்கிரீனாக உள்ளன. இந்த நிலையில், மகாராஜா திரைப்படத்தை பார்த்துவிட்டு, சாச்சனாவின் நடிப்பை பாராட்டி பேசியுள்ளார்.

"அந்த பெண்ணை (சாச்சனா) பற்றிய நினைவிலிருந்தே என்னால் இன்னும் மீள முடியவில்லை; என்ன ஒரு அற்புதமான நடிகை! என்னால் இப்படி செய்ய முடியுமா என்று தெரியவில்லை; நான் அந்த ஆளையே (அனுராக் காஷ்யப்) கொன்றிருப்பேன்" என கூறியுள்ளார். மகாராஜா திரைப்படம் குறித்து நடிகர் டாம் ஹாங்க்ஸ் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்ரம்பின் கடற்படை முற்றுகை... சீனாவில் இருந்து 1200 லொறிகளில் சரக்குகளை வரவழைத்த ஈரான் News Lankasri
வங்காளதேசத்தை மூழ்கடித்த முல்டர்: தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ், 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி News Lankasri