அன்சார்டட் படத்திற்காக 17 முறை காரில் அடிபட்டேன் - ஹாலிவுட் நட்சத்திரம் டாம் ஹாலந்த் !

tom holland unchartted
By Kathick Feb 17, 2022 06:40 PM GMT
Report

'ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து, உலகம் முழுக்க பிரபல நட்சத்திரமாக மாறியிருக்கும் நடிகர் டாம் ஹாலந்த் அடுத்ததாக, Sony Pictures Entertainment வெளியிடும் ‘அன்சார்டட்’ ஆக்சன் அட்வெஞ்சர் படம் மூலம், ரசிகர்களை அசத்த வருகிறார். ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என நான்கு மொழிகளில் 18 பிப்ரவரி அன்று இப்படம் வெளியாகிறது.

அன்சார்டட் கதை மிக அட்டகாசமான ஒரு அட்வென்சர் பயணம். சாதாரண வாழ்க்கை வாழும் நாதன் டிரேக் (டாம் ஹால்ந்த்), அனுபவம் வாய்ந்த புதையல் வேட்டையாடுபவரான விக்டர் "சுல்லி" சல்லிவன் (மார்க் வால்ல்பெர்க்) என்பரவரால், ஃபெர்டினாண்ட் மெக்கலனால் திரட்டப்பட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பான மான்காடா மாளிகையின் செல்வத்தை கண்டுபிடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இருவருக்கும் ஒரு சாதாரண திருட்டு வேலையாக துவங்கும் இந்த பயணம் மிகப்பெரும் அட்வென்சராக மாறுகிறது.

சாண்டியாகோ மான்காடா (அன்டோனியோ பண்டேராஸ்) எனும் நபருக்கு முன்னதாக அந்த புதையலை அடைய வேண்டிய சவால் அவர்களுக்கு முன் நிற்கிறது. சாண்டியாகோ மான்காடா அவரும் அவரது குடும்பத்தினரும் தான் அந்த புதையலின் சரியான வாரிசுகள் என்று நம்புகிறார். நேட் மற்றும் சுல்லி துப்புகளை சரியாக புரிந்துகொண்டு அந்த புதையலை கண்டுபிடிக்க முடிந்தால், உலகின் மிகப் பழமையான மர்மங்களில் ஒன்றைத் தீர்க்க முடிந்தால், அவர்கள் $5 பில்லியன் மதிப்புள்ள புதையலை அடைவார்கள், ஒருவேளை நீண்டகாலமாக காணாமல் போன நேட்டின் சகோதரனைக் கூட கண்டுபிடிக்க கூடிய சாத்தியங்கள் இருக்கிறது.

ஆனால் அவர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை களைந்து ஒன்றாக வேலை செய்ய வேண்டும். இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னருக்கான எதிர்பார்ப்பு மேலும் மேலும் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், டாம் ஹாலந்த் படப்பிடிப்பில் நடந்த அசாதரணமான விபத்தை பற்றி பகிர்ந்துகொண்டது தான், இப்படத்தின் விமான ஸ்டண்ட் தான் மிகவும் பெருமைப்படக்கூடிய தருணம் என்று கூறுகிறார் டாம் ஹாலந்த். மேலும் படப்பிடிப்பில் என்னை ஒரு கார் மோதிய நாள் மிகவும் சுவாரசியமான அனுபவமாக இருந்தது.

அது இந்த திரைப்படத்தின் சிறந்த சண்டைக்காட்சிகளில் ஒன்று என்று நான் நினைக்கிறேன்...அன்றைய நாளில் மட்டும் நான் 17 முறை காரில் அடிபட்டேன் என்று கூறியுள்ளார். அன்சார்டட் 4 கேம் 2016 ல் வெளியான நாளிலிருந்து டாம் ஹாலந்த் அதன் தீவிர ரசிகராக இருந்து வருகிறார் இப்போது அவரே அதன் திரைவடிவத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் போல் திரைப்படங்கள் இனி உருவாக்கப்படப்போவதில்லை. பெரிய பெரிய ஆக்சன் படங்களில் ஆக்சன் காட்சிகளில் நடித்தாலும், அவை ப்ளூ ஸ்கிரீனில் எடுக்கப்பட்டு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸால் மாற்றப்படுபவை.

ஆனால் இந்தப்படம் அப்படியானதில்லை, இப்படம் நிஜ லொகேஷன்களில் நிஜமான ஆக்சனாக வடிவமைக்கப்பட்டது. இந்தப்படம் எடுக்க ஆரம்பித்தபோதே நிஜமான லொகேஷன்களில் தான் படம் எடுக்க வேண்டும் என்று ரூபன் பிடிவாதமாக இருந்தார். ப்ளூ ஸ்கிரீன் இல்லாமல், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜம் போலவே கிரிப்ட் மற்றும் தேவாலயம் இரண்டும் கட்டப்பட்டன. இதில் வரும் படகுகள் உண்மையானவை - படகுகள் பறக்கின்றன என்பதை காட்ட, கிம்பலில் உட்புறம், வெளிப்புறம் என் இரண்டிலும் கேமரா நகரும் படி செய்து பறக்கும் உணர்வை கொண்டு வந்தோம். இந்தப்படத்திற்காக நாங்கள் என்ன செய்ய முடியுமோ அதையும் தாண்டி பலமடங்கு உழைத்திருக்கிறோம் என்கிறார் டாம் ஹாலந்த். அன்சார்டட் அட்வென்ஞ்சரை திரையரரங்குகளில் 18 பிப்ரவரி முதல் காணுங்கள் !

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US