2021-ல் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள், ஒரு பார்வை..
கொரோனா தாக்கம் காரணமாக கடந்தாண்டு வெளிவராமல் இருந்த பல திரைப்படங்கள் இந்தாண்டு வெளிவந்தது. அதிலும் சில திரைப்படங்கள் தள்ளிப்போனது. இந்நிலையில் இந்தாண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் மழை பொழிந்த படங்களின் டாப் 10 வரிசையை இங்கு பார்க்கலாம்..
1. மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு, 50 சதவீத இருக்கைகளுடன் வெளிவந்த இப்படம் ரூ. 235 கோடி வசூல் செய்தது.
2. அண்ணாத்த
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிவா இணைந்த முதல் படம் அண்ணாத்த. கடந்த தீபாவளி அன்று வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிசில் ரூ. 160+ வசூல் செய்தது.
3. டாக்டர்
சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் நெல்சனின் டார்க் ஹுமர் கதைக்களத்தில் வெளிவந்த ப்ளாக் பஸ்டர் ஹிட்டான இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்து, மாபெரும் சாதனை படைத்தது.
4. மாநாடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக சிம்பு நடித்து வெளிவந்த படம் மாநாடு. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளியான இப்படம் ரூ. 90 கோடி வசூல் செய்துள்ளது.
5. கர்ணன்
சென்சேஷன் இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாம் படைப்பாக கர்ணன் அமைந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற இப்படம் ரூ. 65 கோடி வசூல் செய்தது.
6. சுல்தான்
கார்த்தியின் தெறி மாஸான நடிப்பில் வெளிவந்த சுல்தான் குடும்ப ரசிகர்களை கவர்ந்த ரூ. 40 கோடி வரை வசூல் வேட்டையை நடத்தியது.
7. அரண்மனை 3
முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது வெளிவந்த அரண்மனை 3 வசூலில் சக்கைபோடு போட்டு ரூ. 35 கோடி வசூல் செய்தது.
8. பாரிஸ் ஜெயராஜ்
சந்தானத்தின் நகைச்சுவையான நடிப்பில் வெளிவந்த படம் பாரிஸ் ஜெயராஜ். படத்தை பார்த்த அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த பாரிஸ் ஜெயராஜ் ரூ. 10 முதல் ரூ. 12 கோடி வரை வசூல் செய்தது.
9. ஈஸ்வரன்
சிம்பு காம்பேக் கொடுத்த ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் ரூ. 10 முதல் ரூ. 12 கோடி வரை வசூல் செய்திருந்தது.
10. ருத்ர தாண்டவம்
சர்ச்சைக்குரிய பல விஷயங்களில் சிக்கி வெளிவந்த ருத்ர தாண்டவம் திரைப்படம் ரூ. 10. முதல் ரூ. 12 கோடி வரை வசூல் செய்தது.