2024ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 இந்திய திரைப்படங்கள்.. இதோ
இந்திய சினிமா 2024
அந்த லிஸ்ட் ஒரு படத்தின் வெற்றியை அப்படத்தின் வசூல் தான் தீர்மானிக்கிறது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்களும் படங்களின் வசூல் விவரங்களை தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
குறிப்பாக முன்னணி நட்சத்திரங்களின் படம் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்தந்த முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், வசூலை பற்றி பேச துவங்கிவிடுவார்கள். இப்படி மாறிவிட்டது இன்றைய சினிமாவின் நிலைமை.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் டாப் 10 குறித்து பட்டியல் வெளிவரும். அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த டாப் 10 இந்திய திரைப்படங்கள் குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
டாப் 10 லிஸ்ட்
- புஷ்பா 2 - ரூ. 1,705 கோடி
- கல்கி 2898 ஏடி - ரூ. 1,200 கோடி
- ஸ்ட்ரீ 2 - ரூ. 874 கோடி
- தேவரா - ரூ. 521 கோடி
- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் - ரூ. 440 கோடி
- Bhool Bhulaiyaa 3 - ரூ. 417 கோடி
- சிங்கம் அகைன் - ரூ. 389 கோடி
- ஹனுமான் - ரூ. 350 கோடி
- ஃபைட்டர் - ரூ. 344 கோடி
- அமரன் - ரூ. 340 கோடி
இந்த டாப் 10 பட்டியலில் தமிழ் சினிமாவில் இருந்து தளபதி விஜய்யின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படமும், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படமும் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.