இந்தியாவில் மிகவும் பணக்கார நடிகைகள் யார் யார்?.. லிஸ்ட் இதோ, டாப்பில் இருப்பது யார்?
நடிகைகள்
அந்த காலத்தில் நடிகர்கள் தான் அதிகம் சம்பளம் வாங்கி வந்தார்கள், நாயகிகளுக்கு மிகவும் குறைவு என இருந்தது.
ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை நடிகர்களுக்கு இணையாக நடிகைகள் சம்பளம் வாங்கி வருகிறார்கள். சரி இந்த பதிவில் நாம் இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகைகள் யார் யார் என்பதை காண்போம்.
கத்ரீனா கைஃப்
பாலிவுட்டின் டாப் நாயகியாக இருந்த கத்ரீனா கைஃப், டாப் 10 லிஸ்டில் 10வது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 225 கோடி.
கஜோல்
9வது இடத்தில் பாலிவுட் நடிகை கஜோல் உள்ளார், இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 240 கோடி.
மாதுரி தீட்சித்
இந்த லிஸ்டில் 8வது இடத்தில் இடம் பிடித்திருப்பவர் மாதுரி தீட்சித், இவரின் முழு சொத்து மதிப்பு ரூ. 250 கோடியாம்.
அனுஷ்கா ஷர்மா
நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா ரூ. 255 கோடியுடன் 7ம் இடத்தில் உள்ளார்.
கரீனா கபூர்
6ம் இடத்தில் உள்ள கரீனா கபூரின் சொத்து மதிப்பு ரூ. 485 கோடியாம்.
தீபிகா படுகோனே
தற்போது குழந்தை பிறந்துள்ளதால் கேமரா பக்கம் அதிகம் வராமல் இருக்கும் தீபிகா படுகோனே ரூ. 500 கோடி சொத்து மதிப்புடன் 5வது இடத்தில் உள்ளார்.
ஆலியா பட்
பிரபல நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்த ஆலியா பட் ரூ. 550 கோடி சொத்து மதிப்புடன் 4ம் இடத்தில் உள்ளார்.
பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கியவர் ஹாலிவுட் பக்கம் சென்று அங்கேயும் கலக்கி வருகிறார். ரூ. 650 கோடி சொத்து மதிப்புடன் 3ம் இடத்தில் உள்ளார்.
ஐஸ்வர்யா ராய்
உலக அழகி என எப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐஸ்வர்யா ராய் ரூ. 860 கோடி சொத்து மதிப்புடன் 2ம் இடத்தில் உள்ளார்.
ஜுஹி சாவ்லா
ரூ. 4600 கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார் நடிகை ஜுஹி சாவ்லா.