மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்த டாப் 10 சுரேஷ்- ஆனால்?
90 கிட்ஸ்களுக்கு நிறைய ஷோக்கள் மிகவும் பேவரெட்டாக இருக்கும். அதில் ஒன்று தான் டாப் 10 சுரேஷின் நிகழ்ச்சி.
ஞாயிற்றுக்கிழமை ஆனாலே போதும் அவரது நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் விமர்சனங்கள் அதிகம் வர இந்நிகழ்ச்சி அப்படியே நிறுத்தப்பட்டது.
22 வருடங்களுக்கு மேலாக இந்நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வந்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் 1500க்கும் மேற்பட்ட எபிசோடுகளை தொகுத்து வழங்கிய அவர் மீண்டும் படங்களை விமர்சனம் செய்ய வருகிறார்.
ஆனால் இந்த முறை நெட்ப்ளிக்ஸ்க்காக டாப் 10 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறாராம். இதில் மற்ற மொழிகளின் படங்களையும் விமர்சனம் செய்வது புதிய வரவேற்பை பெற்று வருகிறதாம்.