டாப் 10 தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ்.. அதிகம் இடம் ரஜினியா இல்லை விஜய்யா
வசூல்
அன்றைய சினிமாவில் ஒரு படம் எப்படி இருக்கிறது, காசு கொடுத்து போய் பார்க்கலாமா என பேசிக்கொண்டனர். ஆனால், இன்றைய சினிமா காலகட்டத்தில் அந்த படத்தின் வசூல் எவ்வளவு? முதல் நாள் எவ்வளவு கலெக்ஷன்? ஆயிரம் கோடி அடிக்குமா என்று பேச துவங்கிவிட்டனர்.

அதே போல் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது படங்களின் முதல் நாள் வசூல், இரண்டாவது நாள் வசூல் என அறிவிப்பை வெளியிடுகின்றனர். அண்மையில் வெளிவந்த கூலி படம் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றத்தை தந்துள்ளது.

சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா. அதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
டாப் 10 லிஸ்ட்:
2.0 - ரூ. 700 கோடி
ஜெயிலர் - ரூ. 620+ கோடி
லியோ - ரூ. 600 கோடி
பொன்னியின் செல்வன் - ரூ. 500 கோடி
கூலி - ரூ. 485+ கோடி (ஸ்டில் ரன்னிங்)
கோட் - ரூ. 450 கோடி
விக்ரம் - ரூ. 440 கோடி
அமரன் - ரூ. 340+ கோடி
கபாலி - ரூ. 320 கோடி

எந்திரன் - ரூ. 305 கோடி தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப் 10 லிஸ்டில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஐந்து திரைப்படங்களும், தளபதி விஜய் நடித்த இரண்டு திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
5,000 ஏக்கர் நிலப்பரப்பில் பற்றியெரியும் காட்டுத்தீ: உயிரைக் கொடுத்து போராடும் தீயணைப்பு வீரர்கள் News Lankasri
வந்தே மாதரம் பாடல் சர்ச்சை... முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – திருமாவளவன் காட்டம்! IBC Tamilnadu