சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் மூன்று நடிகைகள்.. முதலிடத்தில் யார் தெரியுமா

By Karthick Raja Jul 28, 2026 08:00 AM GMT
Report

சின்னத்திரையில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் நடிகைகளில், அதிக சம்பளம் பெறும் டாப் 3 நடிகைகள் குறித்துத்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த டாப் 3 பட்டியலில் முதலிடத்தில் யார் இருக்கிறார் என்று தெரியுமா? இதோ பாருங்க.

மனிஷா மகேஷ்

சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் 'சிங்கப்பெண்ணே'. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை மனிஷா மகேஷ். இவர் இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 30 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் மூன்று நடிகைகள்.. முதலிடத்தில் யார் தெரியுமா | Top 3 Highest Paid Salary Serial Actresses

மதுமிதா

இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருகிறார் மதுமிதா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான 'எதிர்நீச்சல்' சீரியல் மூலம் தமிழில் பிரபலமானார். இதன்பின், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அய்யனார் துணை' சீரியலில் கதாநாயகியாக கலைக்கிக்கொண்டு இருக்கிறார். விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக 'அய்யனார் துணை' உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ரூ. 35,000 வரை சம்பளம் வாங்குகிறார் நடிகை மதுமிதா.

சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் மூன்று நடிகைகள்.. முதலிடத்தில் யார் தெரியுமா | Top 3 Highest Paid Salary Serial Actresses

5 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

5 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சுவாதி கொண்டே

முதலிடத்தில் 'மூன்று முடிச்சு' சீரியல் கதாநாயகி சுவாதி கொண்டே உள்ளார். சின்னத்திரையில் நம்பர் 1 சீரியலாக இருக்கிறது மூன்று முடிச்சு. இந்த சீரியலில் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இதற்குமுன் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே' சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், 'மெய்யழகன்' திரைப்படத்தில் அரவிந்த் சாமி தங்கையாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'மூன்று முடிச்சு' சீரியலில் நடிப்பதற்காக இவர் ஒரு நாளைக்கு ரூ. 80 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் மூன்று நடிகைகள்.. முதலிடத்தில் யார் தெரியுமா | Top 3 Highest Paid Salary Serial Actresses

சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 3 நடிகைகள் குறித்து இதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல. இது இணையத்தில் உலா வந்த தகவல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US