இதுவரை 2025-ல் தமிழ் சினிமா மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல், அதில் டாப் 5 லிஸ்ட் இதோ
தமிழ் சினிமா 2025
இந்த 2025ம் ஆண்டு துவக்கம் தமிழ் சினிமாவிற்கு நன்றாக அமைந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். மதகஜராஜா, டிராகன், குட் பேட் அக்லி, மாமன், டூரிஸ்ட் பேமிலி என தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.
2025ல் ஆறு மாதங்களை தமிழ் சினிமா கடந்துள்ள நிலையில், இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்துள்ள டாப் 5 படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
டாப் 5 லிஸ்ட்
இதில் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு அஜித் நடித்த திரைப்படங்களும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. அதன்பின், டிராகன், டூரிஸ்ட் பேமிலி, மதகஜராஜா ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த இடங்களை டாப் 5ல் பிடித்துள்ளன.
- குட் பேட் அக்லி - ரூ. 180 கோடி
- விடாமுயற்சி - ரூ. 85+ கோடி
- டிராகன் - ரூ. 83+ கோடி
- டூரிஸ்ட் டாமிலி - ரூ. 67 கோடி
- மதகஜராஜா - ரூ. 54 கோடி
மேலும் ரெட்ரோ ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது. வீர தீர சூரன், மாமன் மற்றும் தக் லைஃப் ஆகிய திரைப்படங்கள் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
