அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. யார் யார் தெரியுமா?
டாப் 5
கொரோன காலகட்டத்தில் OTT-தளங்கள் அசுர வளர்ச்சியை அடைந்தது. சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி பெரிய பட்ஜெட் திரைப்படங்களும் OTT தளத்தில் வெளிவந்தது.
இந்நிலையில் தற்போது OTT-யில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளை பற்றி பார்க்கலாம் வாங்க..
இதோ லிஸ்ட்..
இதில் 5-வது இடத்தில் பிரியாமணி பிடித்துள்ளார். தி ஃபேமிலி மேன் 1 மற்றும் 2 வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ள இவர், இப்படத்திற்காக ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
4 வது இடத்தில் நடிகை ராஷி கண்ணா உள்ளார். இவர் ஃபார்ஸி, ருத்ரா போன்ற வெப் தொடர்களில் நடித்துள்ளார். ஃபார்ஸி வெப் சீரிஸில் நடிக்க ரூபாய் ரூ.1.5 கோடி அவர் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த லிஸ்டில் 3 வது இடத்தை பிடித்து இருக்கிறார் நடிகை சுஷ்மிதா சென். பாலிவுட் நடிகையான இவர் ஆர்யா மற்றும் ஆர்யா 2 போன்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இதற்காக ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
2 வது இடத்தை பிடித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. இவர் சேக்ரட் கேம்ஸ், ஓ.கே கம்ப்யூட்டர், மேட் இன் ஹெவன் போன்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இவர் ஒரு வெப் தொடரில் நடிக்க ரூ 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த லிஸ்டில் 1 இடத்தை பிடித்து இருக்கிறார் சமந்தா. இவர், இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார். வெப் சீரிஸ்க்காக நடிகை சமந்தா ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்தாக தகவல் வெளிவந்துள்ளது.

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
