இந்தியாவில் டாப் 5 ஓடிடி தளங்கள் லிஸ்ட்.. அதிக வருமானம் ஈட்டுவது இந்த நிறுவனம் தானா
இந்தியாவில் தியேட்டர் சென்று படம் பார்க்கும் கலாச்சாரம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ஓடிடி தளங்கள் தான்.
வீட்டில் இருந்தே படம் பார்க்கலாம், பாப்கார்ன் - பார்க்கிங் என ஆயிரங்களை செலவிட வேண்டியது இல்லை என்பதால் மக்கள் ஓடிடி தளங்கள் பக்கம் செல்வது அதிகரித்து வருகிறது.

டாப் 5 ஓடிடி தளங்கள்
இந்தியாவில் அதிகம் வருமானம் ஈட்டும் ஓடிடி தளங்கள் லிஸ்ட்டில் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் தான் முதலிடத்தில் இருக்கிறது. வருடத்திற்கு 10800 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது அந்த நிறுவனம்.
அடுத்து நெட்பிலிக்ஸ் இந்தியாவில் மட்டும் 2900 கோடி ரூபாய் வருமானத்துடன் இரண்டாம் இடத்தில் தான் இருக்கிறது.
அமேசான் ப்ரைம் ரூ.1200 கோடி, சோனி லிவ் ரூ.1100 கோடி, ஜீ5 ரூ.1050 கோடி உடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.