தமிழகத்தில் டாப் 5 சீரியல்கள் என்னென்ன.. மாஸ் காட்டிய தொலைக்காட்சி எது?
சீரியல்கள்
வாரா வாரம் சரியாக வியாழக்கிழமை ஆனால் வந்துவிடுகிறது தமிழகத்தில் டாப்பில் ஓடிய சீரியல்களின் டிஆர்பி.
கடந்த வாரம் பொறுத்த வரைவில் சன், விஜய், ஜீ தமிழ் சீரியல்கள் பல பரபரப்பின் உச்சத்தில் தான் கதைக்களம் இருந்தது.
எனவே டிஆர்பியில் மாற்றம் வந்துள்ளதா அல்லது வழக்கமாக டாப் 5ல் இடம்பிடிக்கும் சீரியல்கள் தான் வந்துள்ளதா என்பதை காண்போம்.
சிங்கப்பெண்ணே
இதில் இப்போதும் ஆனந்தி கர்ப்பம் ஆனது யாரால் என்ற கதைக்களம் தான் பரபரப்பின் உச்சமாக ஓடுகிறது. 8.72 ரேட்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
மூன்று முடிச்சு
நந்தினி பணம் திருடிவிட்டார் என்ற பேச்சு தான் கடந்த வாரத்தில் ஒளிபரப்பானது. 2வது இடத்தில் உள்ள இந்த தொடர் 8.23 ரேட்டிங் பெற்றுள்ளது.
கயல்
குடும்பத்தினருக்கு பிரச்சனை, அதை கயல் தீர்த்து வைப்பது இப்படியே தான் இந்த தொடர் செல்கிறது. ஆனாலும் இந்த சீரியல் 8.12 ரேட்டிங்கோடு 3வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் 7.31 ரேட்டிங் பெற்று மருமகள் தொடர் 4வது இடத்தை பிடிக்க விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 7.22 ரேட்டிங்குடன் 5வது இடத்தை பிடித்துள்ளது.

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
