விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு வடிவேலு இதையாவது செய்திருக்கலாம்- நடிகர் ஆதங்கம்
விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் அவர்கள் கடந்த டிசம்பர் 28ம் தேதி காலை 6.10 மணிக்கு மியாட் மருத்துவமனையில் காலமானார்.
71 வயதான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறுதிச்சடங்கில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்றதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.
அவரின் இறுதிச் சடங்கிற்கு நேரில் வர முடியாத பிரபலங்கள் இப்போது அவரை அடக்கம் செய்த இடத்திற்கு வந்து வணங்கி வருகிறார்கள்.
ஆனால் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்திற்கு வராத, ஒரு அறிக்கை கூட விடாத வடிவேலு பற்றி தான் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பிரபலத்தின் பேட்டி
அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ரஞ்சித் பேசும்போது, இந்த உலகத்தில் யாரும் நிரந்தர எதிரி கிடையாது.
வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே உள்ளி தனிப்பட்ட பிரச்சனைக்குள் நான் செல்லவில்லை, எதிரியாக இருந்தாலும் இறந்து விட்டால் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவது தான் தமிழர்களின் பழக்கம்.
நேரில் செல்ல முடியவில்லை என்றால் கூட ஒரு அறிக்கையாவது வடிவேலு விட்டிருக்க வேண்டும். அதையும் அவர் செய்யாதது தவறான விஷயம் என பேசியுள்ளார்.