தனி ஒருவன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகர் தானாம்.. அட, இது தெரியம போச்சே
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன்.
இப்படத்தில் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில், நடிகர் அரவிந்த் சாமி, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதே போல், இப்படத்தில் ஜெயம் ரவி ஏற்று நடித்திருந்த மித்ரன் கதாபாத்திரத்தில் மிகவும் சவால்கள் நிறைந்த பாத்திரமாக இருந்தது.
இந்நிலையில் இந்த தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது தளபதி விஜய் தானாம்.
கதை கேட்டவுடன், இந்த கதையில் ஜெயம் ரவியை நடிக்க வைத்தால், நன்றாக இருக்கும் என்று மோகன் ராஜாவிடம் விஜய் கூறினாராம்.
இதன்பின் தான், இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக கமிட் ஆனார் என்று செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.