வரலாறு படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த டாப் நடிகர் தானாம்.. மிஸ் ஆன மிகப்பெரிய காம்போ
தல அஜித் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகியிருந்த திரைப்படம் வரலாறு. இப்படத்தில் தல அஜித்தின் நடிப்பில் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானாம். இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், நடிகர் ரஜினிக்கு தான், இப்படத்தின் கதையை முதன் முதலில் கூறியுள்ளார்.
அதற்கு ரஜினியும் இப்படத்தை கதையில் நடிக்க ஓகே சொல்லியுள்ளார். ஆனால் காலப்போக்கில், ரஜினியும் கே.எஸ். ரவிக்குமாரும் இந்த கதையை பற்றி பெரிதும் பேசிக்கலவில்லை.
இதனால், சில ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த கதையை அஜித்திடம் கூறி, இப்படத்தை எடுத்துள்ளார் கே.எஸ். ரவிக்குமார்.
படம் வெளிவந்த பிறகு, இந்த கதையை நானே நடித்திருப்பனே என்று கேட்டதுடன், அஜித்தின் நடிப்பையும் ரஜினி பாராட்டியுள்ளாராம்.