பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா?
அட்லீ
அட்லீ, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் ராஜா ராணி என்ற படம் மூலம் தன்னை இயக்குனராக அடையாளப்படுத்திக் கொண்டவர் அட்லீ.
முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க அட்லீ மீது தளபதி விஜய்யின் பார்வை விழ இருவரும் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என 3 ஹிட் படங்களை கொடுத்தார்கள்.
அட்லீ கடைசியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற மாஸ் படத்தை கொடுத்தார்.
அடுத்த படம்
ஜவானுக்கு பிறகு அட்லீ யாருடன் இணைவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரு வீடியோ வந்தது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க அட்லீ, அல்லு அர்ஜுனுடன் இணைந்து புதிய படம் எடுக்க இருப்பதாக வீடியோவுடன் தகவல் வந்தது.
தற்போது படத்திற்கான வேலைகள் அனைத்தும் நடந்து வர படத்தில் இணைந்துள்ள ஒரு நடிகர் குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது நடிகர் விஜய் சேதுபதி, அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் ஸ்பெஷல் கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
