ரஜினியுடன் மோதப்போகும் டாப் நடிகர்.. வெற்றிபெறப்போவது யார்
தலைவர் 169
ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தற்போது உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 169.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கி, முழுவதும் முடிந்து வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அதே தேதியில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படமும் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிட்டனர்.

விஜய் Vs ரஜினி
இதன்முலம், விஜய்யின் தளபதி 66 படமும், ரஜினியின் தலைவர் 169 படமும் ஒரே நாளில் வெளியாகி மோதப்போகிறது என்று திரை வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.
இதில், யாருடைய படம் மக்களின் மனதை வெல்ல போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.