பத்து தல படத்தை நிராகரித்த டாப் நடிகர்.. ஓகே சொன்ன சிம்பு
பத்து தல
கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல. இப்படம் கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் ரீமேக் ஆகும். சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
மேலும் பிரியா பவானி ஷங்கர் மற்றும் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரநாளில் நடித்துள்ள நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெளிவந்த பத்து தல ட்ரைலர் சும்மா வெறித்தனமாக இருந்தது. பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம் வருகிற 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.
நிராகரித்த டாப் நடிகர்
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் சிம்பு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தானாம்.

மஃப்ட்டி படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று கூறிய ரஜினிகாந்த், ரீமேக் படம் என்பதால் நிராகரித்துவிட்டாராம். இதன்பின் சிம்புவிடம் இந்த கதை வந்துள்ளது. உடனடியாக ஓகே சொல்லி இப்படத்தை கமிட் செய்துள்ளார் சிம்பு.
பல கோடி லாபம் கொடுத்த ஹீரோவுக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. சூப்பர் ஜோடி