விஜய் படத்தில் வில்லனாகும் முன்னணி ஹீரோ.. அதுவும் விக்ரம் Rolex போன்ற கதாபாத்திரத்தில்
தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். குடும்ப கதைக்களத்தில் உருவாகும் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் - விஜய்
இப்படத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தளபதி விஜய் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று லோகேஷ் கூறியுள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நான்காவது முறையாக சமந்தா நடிக்கப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
வில்லனாக தனுஷ்
இந்நிலையில், தளபதி 67 படத்தை குறித்து அறிவிப்பே வராத நிலையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க தனுஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67 படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டால், அவருடைய கதாபாத்திரத்தில் விக்ரம் படத்தில் வந்த Rolex கதாபாத்திரம் அளவிற்கு வெறித்தனமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu